சீமான் பாஜக தூண்டுதலின் பெரும் பேசுகிறாரா? அவருக்கு சுயபுத்தி இல்லையா? TTV தினகரன் பதில்..!
Is Seeman speaking at the instigation of BJP
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சீமானுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை டி.டி.வி. தினகரன் சந்தித்தார். இதன் போது செய்தியாளர்கள் பாஜகவின் தூண்டுதலின் பேரில் தான் சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறாரா? என என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தமிழ் சமுதாயத்திற்கு செய்த பணிகள், சீர்திருத்தங்கள் எல்லாம் ஏராளம். பெரியாரை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசிதான் சிலர் தங்களின் இருப்பையே காட்டி கொள்கிறார்கள்.
கடந்த காலங்களில் பெரியாரை சீமான் எப்படி புகழ்ந்து பேசினார் என்று அனைவர்க்கும் தெரியும். இன்றைக்கு இப்படி மாற்றி பேசுவதற்கு காரணம் அவருக்கு தான் தெரியும். பெரியாரின் பெரும்பாலான கொள்கைகளை நாம் ஏற்று கொண்டாலும் அவரின் கடவுள் மறுப்பு பிராமணிய எதிர்ப்பை நாம் ஏற்று கொள்வதில்லை.
பாஜக கடவுள் பற்று கொண்ட கட்சி. பெரியாரின் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி பாஜக. பாஜக தூண்டுதலின் பேரில் சீமான் பேசுகிறார் என்றால் அவர் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? அவருக்கு சுயபுத்தி இல்லையா?
தொடர்ந்து பெரியாருக்கு எதிராக பேசக்கூடிய இயக்கம் பாஜக. சீமானுக்கு பின்னணியில் பாஜக இருக்கிறது என்று நினைக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவான கருத்தை சீமான் பேசுவதால் அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Is Seeman speaking at the instigation of BJP