கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக இல்லை - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி வழக்கமாக  ஒதுக்கும் 15 நிமிடத்துடன் இன்று 45 நிமிடங்கள் நேரம் அளித்ததாக கூறினார்.

மேலும் பிரதமர் மோடியிடம்  3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்த அவர், மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரிகை விடுத்துள்ளதாகவும், இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்த்ததாக கூறுவது தவறு என்றும், நான் ஒரு முதல்வராக பிரதமரை சந்தித்தேன் என்றும், அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It was not the DMK that made kachchatheavu a carpet chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->