இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த ஆளும் கட்சி தலைவர்.!
J P nadda Support to Ilayaraja
அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில், இசைஞானி இளையராஜாவுக்கு ஆதரவளித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"உலகின் புகழ்மிக்க இசை அமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? அவரின் கருத்து பிடிக்கவில்லை என்பதால் விமர்சிப்பது தான் ஜனநாயகமா?
ஒரு கட்சிக்கும், அந்தக் கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்ததால், அதற்கு அவரை எதிர்த்து விமர்சிப்பது தவறான அணுகுமுறை.
கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. கட்சியினை சார்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்". என்று அந்த அறிக்கையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
English Summary
J P nadda Support to Ilayaraja