ஜனசேனா 21 எம்.எல்.ஏ, 2 எம்.பி !!ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் 100 சதவீத வெற்றி! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் ஆந்திரா நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கி அதில் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சந்திரபாபு நாயுடு இன் தெலுங்கு தேசம் கட்சியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதியில் 133 இடங்களை கைப்பற்றி  தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்ட பவன் கல்யாண் கட்சி போட்டியிட்ட 21 சட்டமன்ற தொகுதிகளிலும், இரண்டு மக்களவை  தொகுதிகளிலும் கைப்பற்றியும் 100 சதவிதம் வெற்றியை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Janasena 21 MLA And 2 MP Actor Pawan Kalyan 100 percent victory in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->