ஊழலும், சாராயமும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள்.! - ஜெயகுமார், அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த அண்ணாமலையின் நடை பயணம் காரணமாக அமையும் என பேசி இருந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "இந்தியாவிற்கு முன்னோடியான திட்டங்களை எங்கள் தலைவர்கள் கொண்டு வந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மீனவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ஏற்ற அரசாக அதிமுக அரசு இருந்துள்ளது. அந்த வழியில் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி  தலைமையிலான அரசும் செயல்பட்டது.

அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் தேசிய அளவில் பேசக்கூடிய தலைவர்களாக இருந்துள்ளனர். யாராவது கருணாநிதி திட்டம் என சொல்கிறார்களா? 

கருணாநிதியின் திட்டம் என்றால் ஊழல் மற்றும் குடிப்பழக்கம் தான் ஞாபகம் வரும். அதனால்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திட்டங்கள் குறித்து அமித்ஷா பேசியுள்ளார். அவரின் கூற்றுப்படி வரும் 2026 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்" என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar said corruption and liquor was implemented by karunanidhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->