சூடு பிடிக்கும் ஜார்க்கண்ட் சட்ட சபை தேர்தல்!...முக்கியப் புள்ளி பா.ஜ.க.விற்கு கட்சித்தாவல்! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு  கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது.  மேலும், அரசியல் கட்சியினர் அனல் பார்க்கும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த தேர்தலில் பர்ஹைத் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அப்போது ஹேமந்த் சோரனை தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவர் மண்டல் முர்மு.

இந்த நிலையில், தியோகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,  மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதலமைச்சர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில்  மண்டல் முர்மு பா.ஜ.க-வில் இணைந்து உள்ளார். இதனை ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார். இதனால் அரசியல் களம் தற்போது அங்கு சூடு பிடித்துள்ளது.

பர்ஹைத் தொகுதியில் ஹேமந்த் சோரனை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் காம்லியேல் ஹெம்ப்ரான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand legislative assembly election to heat up party manifesto for bjp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->