தமிழக அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள்  பொன்முடி வனத்துறைக்கும் , மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும், மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதே போல் அமைச்சர்கள்  ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறைக்கும், தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து விடுக்கப்பட்ட கா.ராமச்சந்திரன் தமிழக அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு பரிந்துரை விடுத்த நிலையில்,  பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை அடுத்து,  புதிய அமைச்சரவையில் இன்று  மாலை 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Ramachandran appointed as chief whip of tamil nadu government


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->