கள்ளக்குறிச்சி சாராய வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்!
Kallakurichi liquor case madras high court delivers judgment today
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியாது. தொடர்ந்து இந்த வழக்கினை சி.பி..ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.
இது தொடர்பான வழக்கினை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. அதில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்த சூழ்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Kallakurichi liquor case madras high court delivers judgment today