மாநில அரசியலில் களமிறங்கும் கனிமொழி?
Kanimozhi to enter state politics
சென்னை மைலாப்பூரில் மாணவர்களுடான நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், தூத்துக்குடி தொகுதி நாடளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, கலந்துரையாடினார்.
அப்போது அரசியல் நுழைவு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி பதில் அளித்தார். அதில், தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும், அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்றும் கனிமொழி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
எனவே கனிமொழி எப்போது மாநில அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
Kanimozhi to enter state politics