காஞ்சிபுரம் : பேருந்து நிலையத்தில் குவிந்த பெண் ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே மொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பணியாளர்கள் தங்கியிருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், நூறுக்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஊழியர்களில் சிலர் இறந்து விட்டதாக வெளியான வதந்தியால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையே, அந்த தனியார் நிறுவனம் ஒரு வாரம் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

இதனால்,  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram bus stop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->