நேரில் ஆஜராக அமைச்சர் உதயநிதிக்கு 2வது சம்மன்.!! உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


காமராஜர் அரங்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் அந்த மாநாட்டில் பேசிய அவர் "சிலவற்றை எதிர்க்க வேண்டும், சிலவற்றை ஒழிக்க வேண்டும். 

டெங்கு மலேரியா கொரோனா கொசு போன்றவற்றை நாம் எதிர்க்க கூடாது, ஒழிக்க வேண்டும். அது போல தான் சனாதனமும். அதை நாம் எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். சாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூக நீதிக்கும் எதிரானது" என்ன சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினில் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் உதயநிதி ஸ்டாலின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதனால் பதறிப்போன உதயநிதி ஸ்டாலின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து அவ்வாறு பேசியதாக விளக்கம் அளித்த போதும் பாஜக இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. 

இந்தியா முழுவதும் உதயநிதிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த பாஜக பல மாநிலங்களில் அவருக்கு எதிராக புகார் அளித்தது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக மீண்டும் சமன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி பிரீத் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka High court sent 2nd summon to udhayanithi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->