நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது - நடிகை கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது எனவும் திராவிட கட்சிகளின் மாயையில் இருந்து பொதுமக்கள் இன்னும் இல்லை என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இதில் நேற்று வேலூரில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சராக கலந்து கொண்டு பேசினார்.

 அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தமிழகத்தில் பாஜகவுக்கு 5 எம்பி சீட்டுகள் கூட கிடைக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது எனவும் பாஜகவால் பெரிய அளவில் தமிழகத்தில் சாதிக்க முடியாது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜகவுக்கு முன்பை விட அதிக ஓட்டு சதவீதம் கிடைக்கும் என்றும் திராவிட கட்சிகளின் மாயையில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasthuri speech about BJP in parliament election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->