சென்னை வந்த கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன்....!!! அவரை வரவேற்றியது யார் யார் தெரியுமா?
Kerala Chief Minister Pranay Vijayan arrived in Chennai
தொகுதி மறுவரையறை வருகிற 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளதால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. குழு, தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா,தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்:
இந்த அழைப்பையேற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.அதன்படி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.இதைத் தொடர்ந்து கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன்தற்போது தங்கியுள்ளார்.
மேலும் நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Kerala Chief Minister Pranay Vijayan arrived in Chennai