கொரோனா காலத்தில் நோயாளி பாலியல் வன்கொடுமை! ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை! - Seithipunal
Seithipunal


2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி, செப்டம்பர் 5 அன்று அடூர் அரசு மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள கோவிட் சிறப்பு வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். அதே ஆம்புலன்சில் ஒரு மேலும் நோயாளி இருந்தார்.  

மற்றொரு நோயாளியை இறக்கிவிட்ட பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நௌபல், யாருமில்ல பகுதி ஒன்றில் வாகனத்தை நிறுத்தி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் மாணவியை மருத்துவமனையில் இறக்கிவிட்டு, நௌபல் தப்பிச் சென்றார்.  

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தன்னுடைய பெற்றோரிடம் இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கையில் நௌபல் கைது செய்யப்பட்டார்.  

அதன் பின்னர் நடந்த விசாரணைகள் ஐந்து வருடமாக நீடித்தன. பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நௌபல் சிறையில் இருந்தார்.  

இந்நிலையில், வழக்கு விசாரணையை முடித்த கேரள நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala Corona Ambulance driver Life imprisonment 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->