பிரசார களத்தில் இறங்கும் குஷ்பு.! முழு விவரம் இதோ...
Khushboo entering election campaign
பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு வருகின்ற 4 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
வருகின்ற 4 ஆம் தேதி 5 ஆம் தேதி என 5 நாட்கள் வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 6 ஆம் தேதி தென் சென்னையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி அந்தமான் தீவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 9 ஆம் தேதி மும்பை, 11ஆம் தேதி கிருஷ்ணகிரி, 12, 13-ஆம் தேதிகளில் நாமக்கல் 14ஆம் தேதி திருப்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதன் பிறகு வாக்குப்பதிவு முடிந்தவுடன் கேரள மாநிலத்திற்கு சென்று வருகின்ற 20 முதல் 24ஆம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
English Summary
Khushboo entering election campaign