மூடிமறைக்கும் மத்திய அரசு.. அதானிக்கு அரணாக நிற்கிறதா.? - சூடாக கேள்வி கேட்ட எம்.எல்.ஏ.!
Kongu eesvaran about adani and modi
சிங்காநல்லூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குகின்ற விழா நடந்தது. இதில், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையை குப்பையில்லாத மாநகராட்சியாக மாற்ற தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முயன்று வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் இ வி கே எஸ் இளங்கோவன் தான் வெற்றி பெறுவார்.
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆளுங்கட்சிக்கு தான் மக்கள் விரும்பி வாக்களிப்பார்கள். அப்படி என்றால் தான் அந்த தொகுதியில் பணிகள் நன்றாக நடைபெறும். எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டு இருக்கின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகம். அதானி பல்வேறு முறைகேடுகளில் இறங்கி இருக்கிறார் எந்த தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் பற்றி உண்மையை விசாரித்து வெளியில் கொண்டு வர வேண்டியது அரசுடைய கடமை.
இது பற்றி யார் முறையிட்டாலும், கேள்வி கேட்டாலும் அவரது தவறுகளை மூடி மறைப்பது பாஜகவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பாஜகவும், அதானியும் ஒன்றா? எதற்காக பிரதமர் மோடி அதானி குறித்து கேள்வி எழுப்பினால் பொங்குகிறார். கேள்வி எழுப்பினால் விவாதம் செய்யாமல் 'எங்க அப்பன் புதருக்குள் இல்லை என்பது போல நடந்து கொள்கிறார்." என்று விமர்சித்துள்ளார்.
English Summary
Kongu eesvaran about adani and modi