கோவையில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு! வசமாக சிக்கிய பிரபல அரசியல் கட்சி புள்ளி?!
Kovai ED Rain in SDPI Member home
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியின் வீட்டில் இன்று (மார்ச் 20) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலை பகுதியை சேர்ந்த ராஜிக், இரும்பு கடை தொழிலில் ஈடுபட்டு வருவதோடு, எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அமலாக்கத் துறையை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சிஆர்பிஎஃப் போலீசாரின் பாதுகாப்புடன், இன்று காலை அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதற்குடன், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா என்பவரிடமும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் பின்னணியில், அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றது என்ற சந்தேகம் காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பிறகே, சோதனையின் உண்மை காரணம் மற்றும் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kovai ED Rain in SDPI Member home