அப்போ ரஜினி.. இப்போ விஜய்.. முதலில் அரசியலுக்கு வரட்டும்.!! - கே.எஸ் அழகிரி கருத்து..!!
KS Alagiri comments on Vijay entry into politics
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அரசியலுக்கு வரப்போவதாக என பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை அவ்வப்பொழுது அவர் எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார்.
அதன்படி நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு பேசிய நடிகர் விஜய் "மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். வருகங்கால வாக்காளர்களான நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது. ஒருவருக்கு கல்வி மட்டுமே அழிக்க முடியாது சொத்து" தொலைபேசி இருந்தார். நடிகர் விஜயின் இத்தகைய பேச்சு பலதரப்பட்ட மக்களின் பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியிடம் செய்தியாளர்கள் நடிகர் விஜயின் அரசியலுக்கு வரப்போவதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "இப்படித்தான் நடிகர் ரஜினி இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று பரபரப்பை உண்டாக்கினர். ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை. இப்போது நடிகர் விஜய்யை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்" என பதில் அளித்துள்ளார்.
English Summary
KS Alagiri comments on Vijay entry into politics