தேர்தல் ஆணையம் மீது சட்ட நடவடிக்கை பாயும்!....காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
Legal action will be taken against the election commission congress warns
ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இதன் மூலம் ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்ற நிலையில், நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் ஒன்றை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது. அதில், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினோம் என்றும், ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளிக்கும் பதில்கள் தாழ்ந்த தொனியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள். எந்த விமர்சனத்தையும் செய்யக்கூடாது என்றும், கட்சியை தாக்கக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற கருத்துகளை நீக்குவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளது.
English Summary
Legal action will be taken against the election commission congress warns