மக்களவையில் கனிமொழிக்கு புரியும்படி பெரியாரின் பாடத்தை எடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.! சிறப்பான சம்பவம்.!
Lok Sabha SmritiIrani v kanimozhi
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மசோதாவுக்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவிக்க, அவருக்கு புரியும் படி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பாடம் எடுத்த ருசிகர சம்பவம் சற்றுமுன் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து, பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இன்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி தாக்கல் செய்தார்.
அப்போது, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தவிர, யாரையும் கலந்தாலோசிப்பதில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. அத்தகைய இடையூறு மசோதாவை நிலைக்குழு அல்லது தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது மிகவும் முக்கியம்.
அவர்கள் அதை மறுபரிசீலனை செய்து, சிவில் சமூகத்தில் கருத்துகளைக் கேட்டு, பின்னர் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்" என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தி பேசினார்.
இதற்க்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், "ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதமாகிவிட்டோம். (ஈரோடு ராமசாமி கருத்தை முன்வைத்து)
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் 21 வயதில் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும்" என்று சிறப்பான ஒரு பதிலை கனிமொழிக்கு கொடுத்துள்ளார்.
அதற்கு பின் கனிமொழி எம்.பி., என்ன பேசினாலும் அது ஈரோடு ராமசாமியின் ஆண்-பெண் சமம் என்ற கொள்கைக்கு முரணாகிவிடும் அல்லவா....
English Summary
Lok Sabha SmritiIrani v kanimozhi