'அன்பு,கருணை,....!' ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்...!
Love mercy TVK leader Vijay extends Easter greetings
கிறிஸ்தவர்கள், இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை 'ஈஸ்டர்' ஆக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், இன்று உலகம் முழுவதும் 'ஈஸ்டர் பண்டிகை' மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் (த.வெ.க) விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் 'ஈஸ்டர் வாழ்த்து' செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
விஜய்:
அதில் அவர் கூறியிருப்பதாவது,"அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Love mercy TVK leader Vijay extends Easter greetings