சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்!...புதிய டி.ஜி.பி நியமித்து அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடப்பு மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த நிலையில், தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புகார் அளித்த நிலையில்அம்மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மாவை நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் நேற்று டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra assembly elections are heating up new dgp appointed and action taken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->