#JUSTIN : மகாராஷ்டிரா : 2 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.!
Maharashtra Live By election results Stage 1
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மகாராஷ்டிராவின் கஸ்பாபெத் மற்றும் சின்ச்வாட் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இதையடுத்து, பிப்ரவரி 27 ஆம் தேதி ராம்கர் (ஜார்கண்ட்), ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), சாகர்டிகி (மேற்கு வங்கம்) மற்றும் லும்லா (அருணாச்சல பிரதேசம்) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு இந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைகளின் முடிவின் படி மகாராஷ்டிரா மாநிலத்தின், காஸ்பாபெத் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸின் ரவீந்திர தங்கேகர் 5,844 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், பாஜகவின் ஹேமந்த் ரசானே 2,863 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையே 2,981 வாக்குகள் வித்தியாசமுள்ளது.
அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தின், சின்ச்வாட் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப்பின் மனைவி அஸ்வினி ஜக்தாப் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில் 449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
English Summary
Maharashtra Live By election results Stage 1