மோதல்!!! மல்லை சத்யா மட்டும் சேனாதிபதி இல்லை... இந்த கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர்...! - துரை வைகோ
Mallai Sathya not only commander many volunteers who worked party Durai Vaiko
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் மல்லை சத்யா,'பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்' என அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.பி. துரை வைகோவும் பதில்பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
எம்.பி. துரை வைகோ:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை. மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை. ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோதல் காரணமாக அவசரமாக ம.தி.மு.க நிர்வாகக்குழு கூடுகிறது.
English Summary
Mallai Sathya not only commander many volunteers who worked party Durai Vaiko