#சென்னை || திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை.! அடையாற்றில் வீசப்பட்ட தலை.! பெரும் பரபரப்பு சம்பவம்.!
manali dmk member sakkarapani murder
சென்னை : மணாலி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் 65 வயதான நபர் சக்கரபாணி. இவர் திமுகவின் திருவொற்றியூரில் 7வது வார்டு பகுதி பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 10ஆம் தேதி முதல் காணவில்லை என்று மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்கரபாணி தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என்பதால், அவரின் செல்போன் எண் சிக்னல் கடைசியாக எந்த பகுதியில் சிக்னல் இருந்துள்ளது என்று ஆய்வு செய்துள்ளனர்.
இறுதியாக அவருடைய செல்போன் டவர் ராயபுரம் பகுதியில் இருந்துள்ளது. அந்த பகுதியில் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டதில், ஒரு வீட்டின் கழிவறைக்குள் சாக்குமூட்டையில் இவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அவருடைய தலை மட்டும் அந்த சாக்குமூட்டையில் இல்லை. அவரின் உடலின் வெவ்வேறு பகுதிகளை துண்டு, துண்டாக வெட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக இந்த வீட்டில் இருந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
40 வயதான சமீம் பானு, டெல்லி பாபு, வாசிம் பாஷா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், சக்கரபாணி பணம் கொடுத்து வானுக்குவதில் தகராறு ஏற்பட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
manali dmk member sakkarapani murder