அரசு பள்ளியில் அதிரடி காட்டிய ஆட்சியர் - சாத்திய அடையாளங்களை அழித்த மாணவர்கள்.!
thoothukudi district collector order remove cast symbols in srivaikundam school
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் தேவேந்திரன் என்பவர் நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பேருந்தில் சென்றார்.
அப்போது பேருந்தை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
English Summary
thoothukudi district collector order remove cast symbols in srivaikundam school