#சற்றுமுன் | புயல் கரையை கடக்கும் நேரம், இடம் - வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான மாண்டஸ் 'தீவிர' புயல் வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது.

தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி அளவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சுமார் மூன்று மணிநேரம் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் கரையை நெருங்கி விட்டது என்பதை குறிக்கும் விதமாக 'ரெட் மெசேஜ்' என்று சொல்லக்கூடிய சிகப்பு நிற எச்சரிக்கையை தற்போது, வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

 

புயல் குறித்த சில அண்மைய செய்திகள் :

* மாண்டஸ் புயல் எதிரொலி - சென்னை விமானநிலையத்தில் தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமான சேவை ரத்து.

* புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள் ரத்து.

* சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு.

* ஆம்னி பேருந்துகள் இன்றிரவு வழக்கம்போல் இயங்கும் : "ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், வார இறுதிநாள் என்பதாலும், பேருந்துகளை இயக்க முடிவு - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவிப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandous Cyclone alert Time place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->