விருதுநகரில் துரை வைகோவிற்கு சார்பாக ம.தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!!
MDMK workers protest Virudhunagar on behalf Durai Vaiko
கடந்த ஆண்டு, ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளராக, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் மகன் 'துரை வைகோ' தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று, துரை வைகோ கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியாலும், சில பல பிரச்சனை காரணமாக தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. மேலும், ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இந்த சூழலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டியில், ராஜினாமாவை 'துரை வைகோ' திரும்பப் பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
English Summary
MDMK workers protest Virudhunagar on behalf Durai Vaiko