அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு; கனிமொழி எம்பி ஆதங்கம்..!
Minister Ponmudi controversial speech Kanimozhi MP disapproval
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கனிமொழி ஆதங்கத்துடன் பதில் அளித்தார். ''அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.'' எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்,
அத்துடன், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஒருவருக்கு எத்தனை முறை தண்டனை தருவது என்ற கேள்வி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister Ponmudi controversial speech Kanimozhi MP disapproval