பேனா சின்னத்திற்கு கூட்டணி கட்சி தலைவர் எதிர்த்தாரா? திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்க்கவில்லை , அவர் ஆதரவு தான் தெரிவித்துள்ளார் என்று, திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்த சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், மார்க்ஸ்சிட் கம்னியூஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரத்தில் நிறைய எதிர்ப்புகள் வருவதால், முதலமைச்சர்  மு க ஸ்டாலின் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது குறித்து உங்களின் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "கே பாலகிருஷ்ணன் ஆதரவாக தான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையை முழுவதுமாக படித்துப் பாருங்கள். அதில் உள்ள ஒரு வரியை மட்டும் எடுத்து கேள்வி கேட்காதீர்கள்.

கருணாநிதிக்கு பேனா வைப்பதை முழு மனதாக வரவேற்று உள்ளார் அவர். வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவருக்கு, நூறாண்டுகள் கடந்து, கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் அவருடைய புகழ் நிலைத்து இருக்கும்.

ஆகவே ஒரு அறிக்கையை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு, அந்த அறிக்கையினுடைய சாராம்சத்தை பேச வேண்டுமே தவிர, ஓர் இரு வரிகளை மாத்திரம் வெட்டுவதும், ஒட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. பாலகிருஷ்ணன் அவர்கள் முழுவதுமாக இந்த பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister sekar babu say about pen statue CPIM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->