வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை கிடைத்ததில் தாமதம்.!! - முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பேரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இன்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணம் கோர உள்ளார். அதற்கு முன்பாக இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது "டிசம்பர் 17 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று டிசம்பர் 17ஆம் தேதி தான் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆனால் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக வரலாறு காணாத மழை பெய்தது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

மழை வெள்ளம் முன்னெச்சரிக்கையில் 12,568 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை வெள்ள சேதத்துடன் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களையும் இணைத்து பிரதமர் மோடிஇடம் இன்று நேரில் கோரிக்கை வைக்க இருக்கிறேன். அடுத்தடுத்த பேரிடர்களை சந்தித்துள்ள தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkstalin accusation delayed in receiving Meteorological Center warning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->