திமுக முக்கிய எம்எல்ஏவின் கட்சிப் பதவி பறிப்பு.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!!
mla kp shankar party posting
திமுகவில் 2006 முதல் 2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கேபிபி சாமி. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2020 ஆம் ஆண்டு கேபிபி சாமி உயிரிழந்தார். பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கேபிபி சாமியின் சகோதரரான கேபி சங்கருக்கு முதல்முறையாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கடும் போட்டிக்கு இடையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளது. கே பி சங்கரின் செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தலைமை கொண்டு செல்லப்பட்டது. மேலும் திமுக எம்பி கனிமொழி தீவிர ஆதரவாளராக கேபிள்சங்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ கேபி சங்கர் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
mla kp shankar party posting