ஜனாதிபதி அவமதிக்கப்படுவதற்கான காரணம்? காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரக்தி..? மக்களவையில் மோடி கேள்வி..?
Modi asked in the Lok Sabha what is the reason for the insult to the President
ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆற்றிய உரை, நாட்டின் விடுதலைப் பாரதத்திற்கான உறுதியை வலுப்படுத்தும் என்றும், சாமானிய மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ""நாம் 2025-இல் இருக்கிறோம். ஒரு வகையில், 21-ஆம் நூற்றாண்டின் 25 சதவீதம் கடந்து விட்டது.
20-ஆம் நூற்றாண்டிலும் 21-ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளிலும் சுதந்திரத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும். ஆனால், ஜனாதிபதியின் உரையை நாம் நுணுக்கமாகப் படித்தால், வரவிருக்கும் 25 ஆண்டுகள் மற்றும் விடுதலைப் பாரதம் குறித்து மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது குறித்து அவர் பேசியது தெளிவாகிறத என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்கள்தொகையில் பாதி பேர் முழு வாய்ப்பைப் பெற்றால், இந்தியா இரு மடங்கு வேகத்தில் முன்னேற முடியும். மேலும் பல ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றிய பிறகு என்னுடைய இந்த நம்பிக்கை வலுவடைந்துள்ளது என்றும் தெரிவித்துளார்.
மேலும் மக்களவையில் பேசுகையில், எங்களுக்கு ஒரு பெண் ஜனாதிபதி இருக்கிறார், அவர் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர், நீங்கள் அவரை மதிக்க முடியாவிட்டால், அது ஒரு விஷயம். ஆனால், அவருக்கு எதிராகக் கூறப்பட்ட விஷயங்கள், அவர்களின் அரசியல் விரக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், ஜனாதிபதி அவமதிக்கப்படுவதற்கான காரணம் என்ன? கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை விவரிக்க, அவரால் பேசவே முடியவில்லை "மோசமான விஷயம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார் என்பதை மோடி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவர், பாஜக எம்.பி.க்கள், ஜனாதிபதியை விவரிக்கும்"இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளுக்கு" சோனியா காந்திக்கு எதிராக நாடாளுமன்ற உரிமை மீறல் நோட்டீசை தாக்கல் செய்துள்ளனர்" என்று மேலும் குறிப்பிட்டுளார்.
English Summary
Modi asked in the Lok Sabha what is the reason for the insult to the President