காலையிலேயே அதிர்ச்சி... நாகை எம்.பி செல்வராஜ் சென்னையில் காலமானார்.!!
Nagapattinam MP Selvaraj passed away in Chennai
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் நாகப்பட்டினம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.செல்வராஜ் தனது 66 வது வயதில்காலமானார்.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சேர்ந்த செல்வராஜ் கடந்த 1989 1996 1998 மற்றும் 2019 ஆண்டுகளில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வரஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nagapattinam MP Selvaraj passed away in Chennai