வடகிழக்கு பருவமழைக்கு லீவ் எடுத்துக்கொண்ட முதல்வர்! ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு ஸ்டாலின் வந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்ல திட்டமிட்டு இருந்த ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நேற்று சிகிச்சையின் பொழுது நீண்ட தூர பயணம் தவிர்க்குமாறு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! 

தமிழகத்தில் இன்று (அக்.29) முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு லீவு எடுத்துக் கொண்டாரா ஸ்டாலின்? 

நேற்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பிய ஸ்டாலின் இன்று முதல் அரசு பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வீட்டில் இருந்த படியே தனது பணிகளை மேற்கொள்வார் என மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையதள வாசிகள் வடகிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளதால் களத்தில் இறங்கி மக்களை சந்திக்க நேரிடும் என்பதால், ஸ்டாலின் பருவ மழை விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்கின்றனர். 

அதிமுகவை சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் கருணாநிதியைப் போன்ற ஸ்டாலினும் மக்களை சந்திக்க பயந்து கொண்டு இது போன்ற வித்தைகளை காட்டுகிறார். உடல் நலனை காரணம் காட்டி மக்களை சந்திக்க ஸ்டாலின் அச்சப்படுகிறார் என ஸ்டாலினை விமர்சிக்கின்றனர். இவர்களின் விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netizens criticizing Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->