பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டம்.? நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.!
Nithish kumar not participate in NITI Aayog discussion
பீகாரில் கூட்டணிக்கட்சியான பா.ஜ.கவுடன் ஏற்பட்டிருக்கும் விரிசலால் தொடர்ச்சியாக பா.ஜ.க நிகழ்ச்சிகளை புறக்கணித்துவருகிறார் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
நிதி ஆயோக் 7-வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. தேசிய கல்விக்கொள்கை அமலாக்கம், வேளாந்துறையில் தன்னிறைவை ஈட்டுதல், மாற்று பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் நகர்புறம் நிர்வாகம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டிற்கு பிறகு ஜூலை மாதத்திற்கு பின், முதல்முறையாக இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்கள் , யூனியன் பிரதேச முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தால் மாநிலங்களுக்கு ஒரு பலனும் இல்லை என்று பிரமருக்கு கடிதம் எழுதிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இந்த கூட்டத்தை புறக்கணித்தார்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியை சேர்ந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாள்களில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்திருக்கிறார். இதனால் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் விரிசல் முற்றியிருக்கிறது. கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
English Summary
Nithish kumar not participate in NITI Aayog discussion