இந்திய மதங்களில் சுதந்திரம் இல்லை? - எம்.பி ராகுல் காந்தி காட்டம்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,  பா.ஜ.க. வழக்கம் போல் பொய்களை கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாஜகவால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால் என்னை அமைதியாக்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பு உள்ளிட்ட  இந்தியாவின் அடிப்படை பண்புகளுக்காக எப்போதும் நான் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு  நான் சென்று கூறிய கருத்து குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாகவும், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளையும் நான் கேட்க விரும்புகிறேன், நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி காட்டமாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No freedom in Indian religions MP Rahul Gandhi Kattam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->