மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! 4 நாளைக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Northeast monsoon IMD Rain Cyclone Alert
வங்கக்கடலில் வரும் 22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாகும் என்றும், வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று (19 ஆம் தேதி), நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், இன்றும் நாளையும் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.
English Summary
Northeast monsoon IMD Rain Cyclone Alert