அந்த கருணாநிதியின் மகள்தான் இப்போது நாகரீகப் பாடமெடுக்கிறார் - கடுமையாக வார்த்தைகளால் பதிலடி கொடுத்த நாதக இடும்பாவனம்!
NTK Idumbavanam Karthi reply to DMK Kanimozhi
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "96 இடங்களை மட்டுமே வென்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் 2006 - 11ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்தது திமுக. தனியொரு கட்சியாகப் பெரும்பான்மை பெறாத திமுகவை, 'மைனாரிட்டி திமுக' என விளித்தார் ஜெயலலிதா.
உண்மையில் ஜெயலலிதா வைத்தது நியாயமான வாதம்தான். அதனை ஏற்றுக் கொள்ள முடியாத கருணாநிதி, "மைனாரிட்டி திமுக என ஜெயலலிதா கூறினால், திருமதி ஜெயலலிதா என்று நான் அவரைக் கூறுவேன்" என்றார்.
தனிக்கட்சி பெரும்பான்மை பெறாத ஒரு கட்சியை , 'மைனாரிட்டி அரசு' எனக் கூறுவதில் எந்தப் பிழையுமில்லை. ஆனால், திருமணம் ஆகாத ஒரு பெண்ணை, 'திருமதி' என விளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
இருந்தும், ஜெயலலிதா மீது வக்கிரமான தனிநபர் தாக்குதல் தொடுத்தார் கருணாநிதி. அப்போது அவருக்கு வயது 85. அந்த வயதுக்கேற்ற முதிர்ச்சியோ, பக்குவமோ, நாகரீகமோ அற்று, இழிவான விமர்சனத்தைச் செய்தவர் கருணாநிதி. அந்த கருணாநிதியின் மகள்தான் இப்போது நாகரீகப் பாடமெடுக்கிறார்" என்று கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
NTK Idumbavanam Karthi reply to DMK Kanimozhi