ஓபிஎஸ் மற்றும் சசிகலாவிற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!!
o raja may be dismissal for admk
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் அளித்துள்ளனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, நேற்று முன் தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
நேற்று ஓ பன்னீர் செல்வத்தை அவரது பண்ணை வீட்டில் முன்னாள் உளவுத் துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான புத்திசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்கனவே தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக சசிகலாவை அதிமுகவில் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் சசிகலாவை சந்தித்து இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ராஜாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது.
இந்நிலையில், ஓ ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக எடப்பாடிபழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜாவை நீக்குவதற்கான அறிவிப்பில் ஓ பன்னீர்செல்வம் கையெழுத்திடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ ராஜாவை நீக்குவதற்கான அறிவிப்பில் ஓ பன்னீர்செல்வம் கையெழுத்திட்டால், அதிமுகவில் சசிகலாவை இணைப்பது கேள்விக்குறியாகி விடும் என கூறப்படுகிறது.
English Summary
o raja may be dismissal for admk