பஞ்சாப் மாநில அரசுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பொழுது போராட்டக்காரர்கள் திடீரென சாலையை மறித்தனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று, பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள கண்டன செய்தில், "மாண்புமிகு பாரதப் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 5.1.2022 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது, அங்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

பாரதப்பிரதமர் பதவி என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது. அந்த பதவிக்கு என்று உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்து வருகிறார்.

பாரதப் பிரதமருக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடியை கடுமையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் வேறெங்கும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு சட்டப்படி என்னென்ன பாதுகாப்பினை தர வேண்டுமோ, மரபுப்படி என்னென்ன மரியாதை செய்ய வேண்டுமா அவற்றை செய்ய வேண்டியது ஒரு மாநில அரசின் கடமை. இதனை செய்யத் தவறிய பஞ்சாப் மாநில அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS AND EPS Condemned punjab Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->