மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. பெரியப்பா தலையை வெட்டி வீசிய தம்பி மகன்!
Anger at not being paid for drinking Brother's son beheaded his uncle
சேலம் அருகே மது குடிக்க பணம் தராததால் பெரியப்பா தலையை வெட்டி வீசிய தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிலத்தரகர் பெரியசாமி.67 வயதான இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் .30 வயதான இவர் பி.எஸ்சி பட்டதாரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் உள்ள செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்ட பொது அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்தாக கூரப்படுகிறது . அப்போது பெரியசாமிக்கும், செல்வராஜூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதும் .
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியை தாக்கியுள்ளார் . இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செல்வராஜ் பெரியப்பா பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் பெரியப்பா உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இருந்த நேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்டனர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து செல்வராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
English Summary
Anger at not being paid for drinking Brother's son beheaded his uncle