#BigBreaking || அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பகிரங்கமாக கேட்ட ஓபிஎஸ்.! என்ன இப்படி சொல்லிட்டீங்க...  - Seithipunal
Seithipunal


பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வருகிற 23-ஆம் தேதிநடைபெறக்கூடிய பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக, சற்றுமுன்பு வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், ஒற்றைத் தலைமை குறித்து தன்னிச்சையாக பேசிவருவது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடிபழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஓ பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், "பல காரணங்களால் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்ற செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளிவைத்து தற்போதைக்கு தள்ளி வைக்கலாம்.

கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS EPS LETTER ISSUE ONE HEAD


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->