பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!
ops say thanks to pm modi march
உக்ரைன்- ரஷ்ய போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் நம் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில், இந்தியர்களை மட்டுமல்லாமல் வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது.
இதற்காக அதிமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
ops say thanks to pm modi march