13 வயது பெண்ணை கற்பழிப்பேன்., விதை பீம்ஜி பா ரஞ்சித் போட்டது.! பொண்ணு மேட்டர முடி., புரட்சி புண்ணாக்கின் அசிங்க வரலாறு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடக்கக்கூடிய பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. கடந்த 30 நாட்களில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரை தொடர்ந்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி, 'தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல பயமாக இருக்கிறது... பாலியல் தொல்லையை நிறுத்துங்கள்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த வாரம் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, கல்லூரி மாணவன் ஒருவனின் பாலியல் தொல்லையால் மூன்று பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

"இந்த சமூகம் மிகக் கேவலமாக உள்ளது.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சமூகமாக திகழ்கிறது... உங்கள் ஆண் பிள்ளைகளை சொல்லி வளருங்கள்.. பெண்களுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி வளருங்கள்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு அந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால், பாராட்டப்பட்ட கானா பாடகன் 'சரவெடி சரண்' என்பவன் பாடிய பாடலொன்று சமூக வலைத்தளமான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த பாடலில் அவன் குறிப்பிட்ட வசனம், "எட்டாம் வகுப்பு அதாவது 13 வயது பள்ளி மாணவியை (கற்பழிப்பு) வாந்தி எடுக்க வைப்பேன்.. அப்போதுதான் அவள் என்னை விட்டு செல்ல மாட்டாள்... அதை மீறி அவள் என்னை விட்டு சென்றாள்.. எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.. நான் சுகத்தை அவளிடம் அனுபவித்துவிட்டேன்.. அவளுக்கு தான் நஷ்டம்" என்று அந்த கானா பாடலில் தெரிவித்து உள்ளான்.

அந்த அயோக்கியன் குறிப்பிட்டது எட்டாம் வகுப்பு படிக்க கூடிய 13 வயது ஒரு பள்ளி மாணவியை., மேடையில், பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டு பாடி உள்ளான். அங்கிருந்த ஒருவனுக்கு கூட இது குற்றமாக தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இந்த பாடல் பாடப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, தற்போது அந்த அயோக்கியன் சரவெடி சரண்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த அயோக்கியன் சரவெடி சரண் கூறிய அந்த வார்த்தை கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆம்.... இதே கருத்தை புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனையை பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய அட்டகத்தி திரைப்படத்தில் வைத்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில், படத்தின் நாயகனுக்கு அவனின் நண்பன் கூறும் அறிவுரை இது தான், "காதலிக்கும் பெண் நம்மை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், முதலில் மேட்டரை முடி (மேட்டர் என்ற வார்த்தை கற்பழிப்பு, உடலுறவு) அப்போதுதான் அவள் நம்மைவிட்டு செல்லமாட்டாள்" பா ரஞ்சித் கூறிய அதே வசனத்தை தான் இன்று சரவெடி சரண் பாடியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், நாடக காதல் கும்பலால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் அன்று தனது திரைப்படத்தில் வைத்த வசனம் தான், இன்று பள்ளி மாணவியை கற்பழிப்பு என்ற அளவுக்கு சென்றுள்ளது.

புரட்சியாளர், சட்டமேதை அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக்கொள்ளும் இயக்குனர் பா ரஞ்சித், "காதலிக்கும் பெண் மேட்டரை முடி (கற்பை சூறையாடு) வேண்டும், அப்போதுதான் அவள் நம்மை விட்டு செல்ல மாட்டாள்" அசிங்கமான, கேவலமான இந்தக் கொள்கையை விதைத்துள்ளார்.

இதன் காரணமாக தான் இன்று பள்ளி மாணவியை கற்பழித்து வாந்தி எடுக்க வைப்பேன் என்று பாடல் பாடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. இயக்குனர் பா ரஞ்சித் அந்த வசனத்துக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.

காதல் இரு மனங்கள் ஒன்றிணைந்து, திருமணத்தில் முடிய வேண்டும். ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் 45 வயது வரை வேண்டுமானால் அழகும், உடல்வாகும், தெம்பும், திராணியும் இருக்கலாம். ஆனால், 45 வயதிற்கு பிறகு ஒரு ஆணுக்கு ஒரு பெண் உதவி தேவை. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் உதவி தேவை.

உடலுறவு மட்டும்தான் பிரதானமாக இவர்கள் எடுத்துக்கொள்ளும் இந்த கருத்து, கடைசி காலத்தில் எந்த விதத்திலும் பயனளிக்காது. காதலில் காமமும் அன்பாக இருக்க வேண்டும்., அதை விடுத்து திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு ஒருவன் புணர்தல் என்பது வன்புணர்வு ஆகும். 

அம்பேத்காரின் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு, பா ரஞ்சித், கற்பி என்பதற்கு பதில் கற்பழி என்று அம்பேத்கரை அசிங்கப்படுத்தும் விதமாக தனது திரைப்படத்தில் வசனம் விதித்திருப்பது சாபக்கேடு.. தமிழ் சமூகத்தின் சாபக்கேடு.. 

தலைகுனியுங்கள் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ்ச் சமூகத்தின்முன். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pa ranjith worst dialogue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->