பட்டா கத்தியுடன் கல்லூரி மாணவன் - ஓடும் இரயில் தட்டி தூக்கிய போலீஸ்!
Pachaiyappa college students arrested Sep
கத்தியை வைத்துக்கொண்டு இரயில் நிலைய பிளாட்பாரத்திலும், வண்டியின் மீதும், தேய்த்துக்கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் வகையில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கண்காணிக்க ADGP இரயில்வே உத்தரவிட்டுள்ளது.
அதன்படியும், DiG ஆலோசனையின் பேரிலும், SP மேற்பார்வையில், DSP சென்னை சென்ட்ரல் தலைமையில் IRP, SI மற்றும் RPF ஆகியோர் தணிக்கை செய்தபோது. திருவள்ளூர் இரயில் நிலைய நடைமேடை எண் 04-ல் மாலை 15.20 மணியளவில் சென்னை to திருத்தணி செல்லும் மின்சார வண்டியில் புட்போடில் தொங்கி பயணம் செய்து வந்த மாணவர்களை தணிக்கைசெய்யப்பட்டது.
இதில், கத்தி வைத்திருந்த பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் திருவாலங்காட்டை சேர்ந்த தனுஷ் மற்றும் ஊத்துக்கோட்டையை சேர்ந்த மதன் ஆகியோரை விசாரணை செய்யும்போதே, தனுஷ் தப்பி ஓடிவிட்டார்.
மாணவன் மதனை பிடித்து கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடிய தனுஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டடுள்ளது.
ஏற்கனவே, மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த குற்றத்திற்கு, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திருவள்ளூர் நெய்வேலியை சேர்ந்த விஜயகுமார். அரக்கோணம் ரெட்டிவளத்தை சேர்ந்த பாலா, ஊத்துக்கோட்டையை சேர்ந்த தீபக், ஊத்துக்கோட்டை ஒதப்பையை சேர்ந்த சந்தோஷ்குமார். திருவள்ளூரை சேர்ந்த ஆகாஷ். பெரியகுப்பத்தை சேர்ந்த சரத் ஆகியோரை பிடித்து திருவள்ளூர் இரயில்வே பாதுகாப்பு படையில் ஒப்புவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
English Summary
Pachaiyappa college students arrested Sep