எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக கடந்த கூட்டத்தொடரின் போது அவை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி மாநிலங்களவையில் 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. 

இதனால், அவைகள் அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல், லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து மக்களவையிலும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இந்த அமளியின் இடையே நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் பேரணியும் நடத்தினர்.

எதிர்க்கட்சிகளின் இவ்வாறான அமளிகளுக்கு மத்தியில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021, அணை பாதுகாப்பு மசோதா, இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப மசோதா, வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு நாளுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபா பணி நேரத்தில் 18 மணி நேரம் 48 நிமிட பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று மக்களவை கூடியதும், தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். மாநிலங்களவை கூடியதும், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். முன்னதாக குளிர்கால கூட்டத்தொடத் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliamentary Winter Session 2021 END


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->