சென்னையை ஸ்தம்பிக்க வைத்த மரணம்! அமைச்சர் கொடுத்த வாக்குறுதி! போராட்டம் வாபஸ்! - Seithipunal
Seithipunal


சென்னை பட்டினம்பாக்கத்தில், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், குலாப் என்ற இளைஞர் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அவரது உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

பலியான இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும், புதிய குடியிருப்புகளை அமைத்து வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.. 

போராட்டம் காரணமாக கலங்கரை விளக்கம் லூப் சாலை முதல் அடையாறு வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த குலாப் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அமைச்சர் அன்பரசன் அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தற்போது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pattinapakkam Chennai Traffic people protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->