சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டமா? - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
plan promote tribalism India where caste discrimination rampant CM MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிபிட்டதாவது,"மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பாரம்பரியமாக செய்த தொழிலை மட்டுமே ஒருவர் செய்ய முடியும்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானியம் கிடையாது.
ஒரு காலத்தில் தந்தை செய்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என முறை இருந்தது.சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது?
கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் 8,951 பேருக்கு ரூ.170 கோடிக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பாகுபாடு இல்லாத திட்டத்தை உருவாக்க நினைத்து உருவானது தான் கலைஞர் கைவினை திட்டம்.
தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும். தி.மு.க.வின் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, கொள்கையின் ஆட்சி" எனத் தெரிவித்தார்.இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
English Summary
plan promote tribalism India where caste discrimination rampant CM MK Stalin