மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி செய்த செயல்!....இணையத்தில் தீயாய் வைரலாகும் அந்த புகைப்படங்கள்! - Seithipunal
Seithipunal


தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தலைநகர் புதுடெல்லியில் உள்ள  விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், சீருடையில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று, தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக என் இளம் நண்பர்களுடன் ஒருவராக நானும் கலந்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களை சுற்றி உள்ள தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்களும் மாறுங்கள் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர்,  உங்களுடைய இந்த தொடக்கமானது தூய்மை இந்தியாவின் மனவுறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக சேர்ந்து பிரதமர் தூய்மை பணியில்  ஈடுபட்ட புகைப்படம் மற்றும் விடியோ சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi actions with students those photos that are going viral on the Internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->